புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-
அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ சுகி அலி, வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
நாளை சனிக்கிழமையுடன் அரசாங்க தலைமைச் செயலாளர் என்ற பதவிலிருந்து விடை பெறுகிறார். இது தனது வாழ்நாளில் கிட்டிய ஒரு சிறந்த பரிசாகும். உணர்வுகளின் வெளிப்பாடாகும் என்று டான் ஸ்ரீ சுகி, இன்று தனது பிரியாவிடை நிகழ்வில் விவரித்தார்.
பொதுச் சேவைத்துறையில் 32 ஆண்டு காலம் தாம் பெற்ற அனுபவங்கள் எளிதில் மறக்க முடியாது என்றும் ஒவ்வொன்றும் பொருள் பொதித்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தலைமைச் செயலாளர் என்ற முறையில் நான்கு பிரதமர்கள் மற்றும் இரண்டு மாமன்னர்களின் கீழ் சேவையாற்றிய பேறு தனக்கு கிடைத்து இருப்பது தமது சேவைக்கு சான்றாகும் என்று டான் ஸ்ரீ சுகி விவரித்தார்.
தம்முடைய அரசாங்கப் பணிக்கு விடையளிக்கும் வகையில் இன்று மாலை 4.50 மணிக்கு புத்ராஜெயா, பெர்டானா புத்ரா- கட்டடத்தில் ஆகக்கடைசியாக தனது punched card – டை டான் ஸ்ரீ சுகி பதிவு செய்தார்.