கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பாதுகாப்பு அம்சங்களும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று இகடன் கோமுநிதி செளமட் அமைப்பின் தோற்றுநரும், தவைருமான டான் ஸ்ரீ லீ லாம் தியே கேட்டுக்கொண்டார்.
செர்டாங் மருத்துவமனையில் 14 வயது பெண், மருத்துவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, அந்த மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து, ஒரு வார காலமாக ஆள்மாற்றாட்டம் செய்த சம்பவம் போன்று மீண்டும் நிகழாமல் இருக்க மருத்துமனையின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் ஆராயப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்க மருத்துவமனை என்பது இயல்பாகவே அதிகமாக சாமானிய மக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க செர்டாங் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தை ஓர் உறுதிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலரான லீ லாம் தை கேட்டுக்கொண்டார்.