குவாந்தன் ,ஆகஸ்ட் 09-
நம்பிக்கை மோசடி செய்ததாக கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் ராண்டி யாப் கிம் ஹெங், குவந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
62 வயதான ராண்டி யாப்-, நீதிபதி மைமூனாஹ் எயிட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக 6 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
குவந்தான் அமச்சூர் கூடைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவரான ராண்டி யாப்- சங்கத்திற்கு சொந்தமான 15 ஆயிரத்து 950 வெள்ளி மதிப்புள்ள காசோலையை தனது மனைவி மற்றும் மகனின் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் ராண்டி யாப் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.