தனியார் துறையினர் மாற்று விடுமுறையை வழங்கலாம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-

வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி மலேசிய தினமும், நபிகள் நாயகத்தின் பிறந்த தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 16 ஆம் தேதி திங்கட்கிழமை, இவ்விரு கொண்டாட்டமும் கட்டாய பொது விடுமுறை நாளாக மனித வள அமைச்சு அங்கீரித்துள்ளது. இதனை மற்ற தேதிகளுக்கு மாற்ற முடியாது என்று இதற்கு முன்பு அறிவித்து இருந்தது.

எனினும் நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுறையை, தனியார் துறையினர் செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்கு மாற்றலாம். அல்லது தங்களுக்கு ஏற்புடைய மற்றொரு தினத்தில் அந்த விடுமுறையை வழங்கலாம் என்று மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS