துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் உத்தவுக்காக போலீஸ் காத்திருக்கிறது

ஈப்போ , ஆகஸ்ட் 09-

லுமுட், அரச மலேசிய கடற்படையின் பயிற்சி வீரர் J. சூசைமாணிக்கம் மரணம் தொடர்பில் விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் உத்தரவுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், மீண்டும் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சூசைமாணிக்கம் மரணம் தொடர்பில் மறு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் மகஜர் வழங்கப்பட்டு இருப்பது தமக்கு தெரியவந்துள்ளதாக டத்தோ அசிசி தெரிவித்தார்.

இதன் தொடர்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் உத்தரவு கிடைத்தால் மட்டுமே அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி இவ்வழக்கை கொண்டு செல்ல இயலும் என்று ஈப்போவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ அசிசி இதனை குறிப்பிட்டார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நுரையீரல் வீக்கத்தினால் இறந்ததாக கூறப்பட்ட 27 வயது சூசைமாணிக்கத்தின் மரணம், ஒரு கொலை என்று கடந்த மாதம் ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

WATCH OUR LATEST NEWS