குளாய்,ஆகஸ்ட் 09-
GAZA- வில் உள்ள பாலஸ்தீன அகதிகள் பிள்ளைகள், தங்கள் கல்வியை மலேசியாவில் தொடர்வதற்கு அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு MYCARE எனும் மலேசிய மனிதாபிமான அமைப்பும், இதர அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
16 வயதுக்கு மேற்பட்ட பள்ளிப்பிள்ளைகள் மற்றும் பல்லைக்கழக மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும். இது தொர்பாக உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் – ருடன் இன்னும் இரண்டு வாரத்தில் பேச்சு நடத்தப்படும் என்று MYCARE தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கமல் நஷாருடின் முஸ்தபா அறிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர்ஃபத்லினா சிடெக்- கையும் தாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக 100 பாலஸ்தீன மாணவகள் கொண்டு வரப்படுவர். 16,17 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் மட்டுமே பெற்றோர்கள் துணையின்றி வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு அனுப்பப்படும் நிலை இருப்பதால் முதலில் 100 மாணவர்கள் கொண்டு வரப்படுவர் என்று அவர் விவரித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போரினால் தங்கள் கல்வியை தொடர முடியாமல் போன காஸாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளின் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் கமல் நஷாருடின் குறிப்பிட்டார்.