சிலாங்கூர் , ஆகஸ்ட் 10-
சிலாங்கூர் , கிள்ளான ஜெயா- வில் சமயப்பள்ளி ஒன்றின் சுராவ்-அருகில் கழிப்பறையில் ஒரு பெண் தலைமை ஆசிரியரையும் ,ஒரு விற்பனை பணிப்பெண்ணையும் கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்ட ஆசாமியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 1 .48 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காய முற்ற 52 வயது பெண் தலைமை ஆசிரியரும் , 26 வயது பெண்ணும் ஷா ஆலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசாமியை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்னிஜாம் ஜாபர் தெரிவித்தார் .