கோலாலம்பூர், ஆகஸ்ட் 10-
வாகனத்தில் மோதுவதிலிருந்து தவிர்க்கும் முயற்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்த போது, மோட்டார் சைக்கி ளின்யின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி பேருந்தில் அரைப்பட்டு பரிதாபமாக மாண்டார் .
இச்சம்பவம் நேற்று காலை 10.40 மணியளவில் கோம்பாக்-கிற்கு செல்லும் ஜாலான் லிங்கரன் தெங்கா 2 எனும் எம்.ஆர்.ஆர் 2 சாலையில் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார் அவரின் 28 வயது கணவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார் .
கணவனும் , மனைவியும் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, இச்சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார் .