பாரிஸ், ஆகஸ்ட் 12-
பிரான்ஸ், பாரிஸ்-சில் கடந்த 19 நாள்களாக நடைபெற்றுவந்த ஒலிம்பிக் போட்டி, இன்று அதிகாலையில், அதிகாரப்பூர்வமாக நிறைவு கண்டது.
கோலாகலமாகவும் கண்கவர் வாணவேடிக்கைகளுடனும் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பிரபல HOLLYWOOD நட்சத்திரம் TOM CRUISE, STADE DE FRANCE அரங்கின் மேற்கூரையிலிருந்து குதித்து, ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தார்.
அது தவிர, பிரான்ஸ்-சை சேர்ந்த கலைஞர்களான BILLIE EILISH, RAPPER SNOOP DOGG முதலானோர் பாட்டுகள் பாடியும் நடனமாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, அப்போட்டிக்கான BATON, அடுத்து வருகின்ற 2028ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்தவிருக்கும் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டது.
இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், உலகம் முழுவதிலுமிருந்து 32 விளையாட்டுகளிலிருந்து 329 பிரிவுகளை உட்படுத்தி, சுமார் 10 ஆயிரத்து 500 விளையாட்டாளர்கள் பங்குக்கொண்டனர்.