பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-
இனி தன்னைப் பற்றி பேசுவதை மலேசியர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய தடகள சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஜிசுல்ஹஸ்னி அவங் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சைக்கிள் விளையாட்டு துறையில், தமது காலம் ஒரு நிறைவுக்கு வந்துவிட்டதால், இனி அடுத்தக்கட்ட வீரர்களுக்கு மலேசியர்கள் ஆதரவளிப்பது அவசியம் என்றாரவர்.
2024ஆம் ஆண்டு பாரிஸ், ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளோட்ட பந்தயத்தின் கெய்ரின் பிரிவில் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளமுஹம்மது ஷா பிர்தௌஸ் சஹ்ரோம் தனது செல்வாக்கை தொடர்வார்.
அவருடன் இன்னும் சில வீரர்கள் உள்ளதால், மலேசியர்கள் அவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென அஜிசுல்ஹஸ்னி கேட்டுக்கொண்டார்.