பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-
வெறொரு நபர்களின் பொருளக கணக்குகளைப் பயன்படுத்தி, மலேசியர்களின் இலட்சக்கணக்கான பணத்தை கொள்ளையிட்டுவரும் மோசடி பேர்வழிகளின் நடவடிக்கைகளை களைய, வங்கிகளில் கணக்குகளை திறப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, புதிய கணக்கை திறப்பதற்கு MYKAD அட்டை, குறைந்தபட்ச வைப்புத்தொகை மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது, புதிய விதிமுறையின்படி, சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களது வருமானத்திற்கான மூலதனம் அல்லது முதலாளிமார்களிடமிருந்து கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
அந்த ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்றால், எவ்வளவு பெரிய தொகையை வைப்புதொகையாக வைக்க எண்ணினாலும், அவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.