ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 12-
நேற்று ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பாலத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். சாலையின் அவசரத் தடத்தில் MPV வாகனத்தினால் மோதப்பட்ட 38 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று பினாங்கு திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லான் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
22 வயதுடைய அந்த MPV வாகன ஓட்டுநர், டிரைவரை மாற்றுவதற்காக வாகனத்தை அவசரத் தடத்தில் நிறுத்திய போது இந்த விபத்து நிகழ்ந்தது..
அவரும் அவரின் நண்பரும் கோலாலம்பூருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது என்று பூர்வாங்க புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரஸ்லான் மேலும் கூறினார்.