ஆசிரியை கொலை/ முன்னாள் காதலன் கைது

ஜோகூர், ஆகஸ்ட் 12-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போன நிலையில் தலையின்றி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மலாக்கா, அலோர் காஜாவில் உடல் கண்டு பிடிக்கப்பட்ட ஜோகூர், கோட்டா மசாய் 3, பாசிர் குடாங், – கைச் சேர்ந்த ஆசிரியை கொலை தொடர்பில் அவரின் முன்னாள் காதலனும், பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவருான முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Forex நாணய பரிமாற்றம் தொடர்பில் மூன்று குழந்தைகளுக்கு தாயாரான அந்த 37 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வீடு திரும்பாமல் போன அந்த ஆசிரியையின் கால்கள், கைகள் இல்லாத, தலையில்லா உடல் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி,கம்போங் தஞ்சூங் ரிமாவ், புலாவ் செபாங் அலோர் கஜா, மலாக்கா- வில் ஒரு கால்வாயில் கண்டு பிடிக்கப்பட்டது. அது காணாமல் போன ஆசிரியை இஸ்திகோமா அஹ்மத் ரோஸி- என்பவருடையது, / என ஜனவரி 6 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இக்கொலை தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பேராக், கெமோர்- ரில் ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஆசிரியையின் உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 5,6 கிலோ மீட்டர் தொலைவில் அந்தப் பெண்ணின் கைவிரல்கள் எலும்புகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியையின் முன்னாள் காதலன், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதி, மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS