சிறையில் இருந்தபடியே காதலிக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்த சுகேஷ் சந்திரசேகர்! லிஸ்ட் ரொம்ப பெருசு…

Jacqueline Fernandez Birthday | Conman Sukesh Chandrashekhar Gift list | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்நாளுக்கு கான்மேன் சுகேஷ் சந்திரசேகர் ஒரு பிரைவேட் படகு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 கோடி மற்றும் 300 வீடுகள் வழங்குவதாகவும் சுகேஷ் உறுதியளித்தார்.

பணமோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சுகேஷ் சந்திரகேக், சிறையிலும் ஆடம்பரவாழ்க்கை வாழ்கை வாழ்ந்து வருகிறார். பிரபல நடிகைகளை சிறைக்கே வரவழைத்து பரிசும் கொடுக்கிறார். இவரது நடவடிக்கைக்கு சிறை காவல்அதிகாரிகளும் துணையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். காதலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் சுகேஷ் சந்திரசேகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டு தேர்வு செய்த சொகுசுப் படகை இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ‘லேடி ஜாக்குலின்’ எனப் பெயரிடப்பட்ட அந்த படகு இன்னும் இரு வாரங்களில் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துளார். அந்த படகுக்கான அனைத்து வரிகளும் கட்டப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளா்.

மேலும் அக்கடிதத்தில், `மை டியர் பேபி,மை பொம்மா” எனக் கூறி, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளர். ஜாக்குலின், இந்த ஆண்டில், அனைத்திலும் வெற்றி பெற்று, உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார் .

கேரளாவுக்கு ரூ.15 கோடி உதவி

மக்கள் நலனில் அக்கரை உள்ள ஜாக்குலினுக்காக கேரளாவின் வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.15 கோடி நன்கொடை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும், வீடுகளை இழந்த மக்களுக்காக சுமார் 300 வீடுகள் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும், ஜாக்குலினை `மிகவும் மிஸ் பண்ணுவதாக’ குறிப்பிட்டுள்ள சுகேஷ், விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதாகவும், அடுத்த ஆண்டு 2025-ல் ரோமியோ ஆண்டு `ரோமியோ-ஜூலியட் போல் சேர்ந்திருந்து பிறந்தநாளை சேர்ந்துகொண்டாட காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜாக்குலின் பிறந்தநாளையொட்டி யூடியூப் சேனல் போட்டியில் வெற்றி பெற்ற ஜாக்குலின் பெர்ணானடஸ் ரசிகர்கள் 100 பேருக்கு iphone 15 Pro வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில், சுகேஷ் சந்திரசேகருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பின்னரும்,அவர் மீது எக்கச்சக்க வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சட்ட நடவடிக்கைகள் தொடர்வாக போலீஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

WATCH OUR LATEST NEWS