மூதாட்டி கத்தியால் குத்தி கொலை

கேபால படாஸ், ஆகஸ்ட் 13-

மூதாட்டி ஒருவர், கத்திரிகோலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பினாங்கு, கேபால படாஸ், பெகன் டாரத், கெலுங் புபு- வில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

தனது உறவுக்காரர் ஒருவரின் தாக்குதலுக்கு ஆளாகி, கடும் காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாக செபரங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மூதாட்டி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 43 வயதுடைய சந்தேகப் பேர்வழியின் சொந்த தாயாரும் கடும் காயங்களுக்கு ஆளாகி கேபால படாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த நபருக்கும், அவரின் , தனது தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுத்து நிறுத்த அந்த மூதாட்டி முற்பட்ட போது சம்பந்தப்பட்ட நபர், கத்திரிகோலினால் குத்தியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிறகு அந்த நபர் பொது மக்களால் வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS