கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-
டிரெய்லர் லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு தீப்பற்றிக்கொண்டதில் அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12.12 மணியளவில் கோலாலம்பூர், செகம்புட் அருகில் ஜாலான் டுத்த டோல் சாவடி அருகாமையில் நிகழ்ந்தது.
அந்த கனரக வாகனம் தீப்பிடித்துக்கொண்டது குறித்து தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயேஸ்ரீ ஹர்தமாஸ்-ஸிலிருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படையின் செயலாக்க கோமாண்டர் முகமட் ரோஸ்டி யூசோஃப் தெரிவித்தார்.
லோரியின் தலைப்பகுதியில் மட்டுமே தீப்பிடித்துக்கொண்டதால் தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதில் வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடியதாக அவர் குறிப்பட்டார்.
இதில் 30 வயது ஓட்டுநர் கைகளில் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்.