குவாந்தன், ஆகஸ்ட் 13-
நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கேமரன் மலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தனது புதிய அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.
கடந்த ஜுலை முதல் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கிய கேமரன்மலை எஸ்பிஆர்எம் அலுவலகத்தை அதன் செயலாக்க துணை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஹ்மட் குசாரி யஹாயா இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
தனா ராடா, கேமரூன் ஃபேர் ஜாலான் பெர்சியரன் கேமிலியா – வில் 57.8 மீட்டர் சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள எஸ்பிஆர்எம் புதிய அலுவலகத்தில் நான்கு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்பிஆர்எம் – முடன் அலுவல் கொண்டுள்ள கேமரன்மலை மக்களுக்கு ஆக்கப்பூர்வமன சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.