மஹ்கோட்டா தொகுதியில் அம்னோ வேட்பாளர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

அம்னோவின் பாரம்பரிய தொகுதியாக மஹ்கோட்டா விளங்குகிறது. அந்த தொகுதியில் தாங்கள் போட்டியிடப் போவதாக ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு கட்சியும் கோரிக்கை விடுக்க வேண்டாம் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

மஹ்கோட்டா தொகுதி தொடர்பில் உறுப்புக்கட்சிப் பொறுப்பாளர்கள் எந்தவொரு உயர் பதவி அல்லது சிறிய பதவியில் இருந்தாலும் இது தொடர்பாக எந்தவொரு எதிர்மறையான அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS