வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடிகள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட நம்பிக்கை மோசடி குற்றவியல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

இதன் வாயிலாக 6 கோடியே 60 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட 29 நம்பிக்கை மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் 31 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 3 கோடியே 33 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ ராம்லி முகமது இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS