மலாக்கா,ஆகஸ்ட் 02-
தலை, கைகால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிக கோரமாக கொலை செய்யப்பட்ட ஸ்குடை- யை சேர்ந்த 33 வயது பள்ளி ஆசிரியையின் படுகொலை தொடர்பில் DNA மரபணு சோதனையின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
தனது முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் அந்த ஆசிரியையின் சிதைந்த உடலை, அவரின் குடும்பத்தின அடுத்த வாரம் கோர முடியும் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் ஆஷாரி அபு சாமா தெரிவித்தார்.
இஸ்திகோமா அஹ்மத் ரோஸி என்ற ஆசிரியையின் உடல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மலாக்கா,புலாவ் செபாங், கம்போங் தஞ்சூங் ரிமாவ்-வில் ஒரு கால்வாயில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த ஆசிரியையுடன் ஒரே பல்கலைக்கழகத்தில் பயன்றவரான 37 வயதுடைய முன்னாள் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஆஷாரி அபு சாமா குறிப்பிட்டார்.