அந்த தகவலை மறுத்தார் சிலாங்கூர் மந்திரி பெசார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 13-

அமைச்சரவை மாற்றத்தில் தாம் ஓர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் ஆருடத்தை சிலாாகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

மந்திரி பெசார் என்ற முறையில் சிலாங்கூர் மாநிலத்திற்கு தலைமையேற்பதில்தான், தாம் ஆர்வமாக இருப்பதாகவும், அமைச்சர் பதவியில் அல்ல என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அமைச்சரவை சீரமைப்பு செய்யலாம் என்று பலமாக ஆருடம் கூறப்பட்டு வரும் வேளையில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அமிருடின் ஷாரி, அமைச்சராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் பல்வேறு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS