என் மகன் 20 லட்சம் வெள்ளியை கடத்தினாரா? லிம் குவான் எங் சாட்சியம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

தனது மகன் 20 லட்சம் வெள்ளியை சிங்கப்பூருக்கு கடத்திச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானதாகும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தகவலில் உண்மையில்லை என்பதை அன்றைய போலீஸ் படைத் தலைவர் அஹ்மத் ஹமீத் படோர் உறுதிப்படுத்தியதாகவும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இவ்விவகாம் குறித்து சீனப்பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட செய்தியில் தமது பெயரை அது குறிப்பிடவில்லை. இருந்த போதிலும் இப்படியொரு தவறான செய்தியை வெளியிட்டதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அத்துடன் அந்த செய்தியை மீட்டுக்கொள்வதாகவும் பகிரங்கமாக அறிவித்தது என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

பிரபல வலைப்பதிவாளர் வான் அஸ்ரி வான் டெரிஸ் என்பவருக்கு எதிராக தாம் தொடுத்துள்ள 30 லட்சம் வெள்ளி மானநஷ்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் மேற்கண்டவாறு சாட்சிம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS