பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்கை சந்தடியின்றி மூடி மறைப்பதற்கு 12 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, நேற்று காலை 10 மணியளவில் பினாங்கு, SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காமுகனை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அந்த அதிகாரி, தனது கடமையிலிருந்து தவறி, அந்த வழக்கை மூடுவதற்கு 12 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பேரம் பேசி பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி, இன்று பெர்லிஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாக பினாங்கு மாநில SPRM இயக்குநர் முகமது ஃபுவாட் பீ பஸ்ராஹ் உறுதிப்படுத்தியுள்ளார்.