கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-
வங்காளதேசத்தின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டவரான முஹம்மது யூனுஸ் உறுதி அளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
வங்காளதேச அரசாங்கத்தின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நோபல் பரிவு வென்றவரான முஹம்மது யூனுஸ்- ஸை ன் தொலைபேசி வாயிலாக நேற்று தொடர்பு கொண்டு தாம் பேசியதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்தின் இடைக்காலத் தலைவர் என்ற முறையில் மலேசியா சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவிதித்துக்கொண்ட போது, அவர் இந்த உத்தரவாதததை அளித்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் சிறுப்பான்மையினர் உட்பட அனைத்து மக்களின் நலனும், அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று முஹம்மது யூனுஸ்- தமக்கு உத்தரவாதம் அளித்து இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வெறிச்செயலை கண்டிக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று மலேசியாவிலிருந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள வேளையில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.