பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 27 வயது பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட அந்த பாதிரியார், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.
பூச்சோங்,பண்டார் பாரு பூச்சோங் – கில் உள்ள ஒரு தேவலாயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார், கடந்த ஜுன் மாதமும், ஜுலை மாதமும் தனது படுக்கையறையில் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அந்த 13 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை போலீசில் புகார் செய்து இருப்பதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.
அந்த இளம் பாதிரியார், 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக வான் அஸ்லான் மேலும் கூறினார்.