இருவர் உயிரிழந்தனர், நால்வர் படுகாயம்

போர்ட் டிக்சன், ஆகஸ்ட் 14-

பதின்ம வயதுடையவர்கள் பயணம் செய்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் பாதையை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த மண்வாரி இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். நால்வர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் போர்ட்டிசக்சன், கம்போங் கெளம் தேசிய தொடக்கப்பள்ளியின் முன்புறம் சாலை சமிக்ஞை விளக்குப்பகுதி அருகில் நிகழ்ந்தது.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 24 வயது இளைஞரும், 19 வயது கல்லூரி மாணவியும் உயரிழந்த வேளையில் 18,19 வயதுடைய இரு கல்லூரி மாணவிகள் மற்றும் 17 வயது இளைஞர், 16 வயது மாணவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். அந்த நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படை கமாண்டர் முகமது காலித் டோல்லா தெரிவித்தார்.

இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை அதிகாலை 2.25 மணியளவில் முடிவுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS