தண்டனை , அபராதம் வகுக்கப்பட்டு வருகிறது

புத்ராஜெயா,ஆகஸ்ட் 14-

மகளிர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணம் செய்கின்ற ஆண்களுக்கு விதிக்கப்படவிருக்கும் அபராதம் மற்றும் தண்டனை குறித்து தற்போது போக்குவரத்து அமைச்சு வரைந்து வருவதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

தற்போது, இதற்காக பிரத்தியேகமான சட்டங்கள் ஏதும் இல்லை. எனவே புதிய சட்டம் வரையப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மகளிர்களுக்கான ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. விதிமுறைகளை பொருட்படுத்தாமல் ஆணவத்துடன் செயல்பட்டு வரும் இத்தகைய நபர்களை தண்டிப்பதற்கு தண்டனை முறை அவசியமாகிறது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் , போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS