மன அழுத்தத்திற்கு ஆளான மாணவி உடலை காயப்படுத்திக்கொள்ள முயச்சி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-

மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படும் மாணவி ஒருவர், தனது உடலை காயப்படுத்திக்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபடப் போவதாக மிரட்டல் விடுத்ததைத்தொடர்ந்து சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கி-யில் ஓர் இடைநிலைப்பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.33 மணியளவில் பள்ளி வாளகத்தில் நிகழ்ந்துள்ளது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

பள்ளி வளாகத்தில் கத்தியுடன் காணப்பட்ட 14 வயது மாணவி, கையை கீறிக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அந்தப் மாணவியை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாக அந்த மாணவி தன்னை காயப்படுத்திக்கொள்ளும் முயற்சியை கைவிட்டதாக ஏசிபி நஸ்ரோன் குறிப்பிட்டார்.

பின்னர் மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அந்த மாணவியை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். பள்ளியின் கட்டொழுங்குப் பிரச்னையை எதனையும் கொண்டிருக்காத தங்கள் மகளிடம் எந்தவொரு மாறுதலையும் பார்க்க முடியவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக ஏசிபி நஸ்ரோன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS