கேபால படாஸ்,ஆகஸ்ட் 14-
தனது தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதாக கூறி, தனது அத்தையை கத்திரிகோலினால் கத்தி கொலை செய்ததாக கூறப்படும் 43 வயதுடைய ஆடவரை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
நேற்று காலை 11 மணியளவில் பினாங்கு,கேபாலா படாஸ், பெகன் டாரத், கெலுங் புபு- வில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 80 வயது மூதாட்டி உயிரிழந்தார். அந்த சந்தேகப்பேர்வழியின் 70 வயது தாயார் கடும் காயங்களுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த நபர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகசெபராங் பேரை உதரா மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் M. தர்மலிங்கம் தெரிவித்தார்.