நீதி கோருகிறார் உடல் ஊனமுற்ற e- hailing ஓட்டுநர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-

பிரமுகர் ஒருவரின் மெய்காவலரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக கூறும் உடல் ஊனமுற்ற e- hailing ஓட்டுநர், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பிரமுகரின் மெய்காவலர் தம்மை எவ்வாறு தாக்கினார் என்பதற்கான வீடியோ கிலிப்பையும் வழக்கறிஞர் N. சுரேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் e- hailing ஓட்டுநர், அம்பலப்படுத்தினார்.

கோலாலம்பூரில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று 48 வயதுடைய ஓங் இங் கியோங் என்ற அந்த e- hailing ஓட்டுநர் கண்ணீருடன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS