தானா மேரா,ஆகஸ்ட் 14-
வீடொன்று தீப்பிடித்துக்கொண்டதில் தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் இளைஞர் ஒருவர் கருகி மாண்டார்.
இச்சம்பவம் இன்று காலையில் கிளந்தான்,தானா மேரா,ஜாலான் கதிர் அடாபி, லோரோங் நிமர் 500 என்ற இடத்தில் நிகழ்ந்தது.
வீட்டின் மேல்மாடியில் உறங்கிக்கொண்டு இருந்த 27 வயது இளைஞர் இதில் கருகி மாண்டதாக தானா மேரா தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.