அந்த  ரகசிய  அறிக்கையை  ஒப்படைப்பீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

கடந்த 7  ஆண்டுகளுக்கு  முன்பு பெட்டாலிங் ஜெயாவில் மர்மமனா முறையில்  காணாமல்  போன பாதிரியார்  ரேமண்ட் கோஹ் , சம்பந்தப்பட்ட  போலீசாரின்  புலன்  விசாரணையின்  ரகசிய  ஆவணத்தை  அவரின்  மனைவியிடம் ஒப்படைக்குமாறு  கோலாலும்பூர்  உயர் நீதி  மன்றம்  இன்று  உத்தரவிட்டது. 

 போலீசாரின்  அந்த புலன்  விசாரணை  அறிக்கையின்  உள்ளடக்கம்  மிக ரகசியமானது  என்று  போலீஸ்  துறையால்  வகைப்படுத்தப்பட்ட  போதிலும்  அதன்  உள்ளடக்கத்தை  அந்த  பாதிரியாரின்  மனைவி  சூசன் லியூ  அறிந்து  கொள்வதற்கு  தகுதி பெற்றுள்ளார்  என்று  நீதிபதி  சு  டிங்  ஜோ  தமது  தீர்ப்பில்  தெரிவித்தார் .

69  வயதான  பாதிரியார்   ரேமண்ட்  கோஹ்  கடத்தப்பட்டதாக  கூறப்பட்டுள்ள  வேளையில் அவரைப்பற்றி  புலன்  விசாரணை  செய்வதற்கு  அமைக்கப்பட்ட  சிறப்பு  போலீஸ்  விசாரணைக் குழு , அந்த பாதிரியார்  காணாமல்  போனதில்  புதைந்து  கிடைக்கும்  விவரங்கள்  ரகசியமானது  என்று  வகைப்படுத்தியுள்ளது .

அந்த அறிக்கை ஏன்  ரகசியமானது  என்பதற்கான  வறுவான காரணங்களை  கூறுவதற்கு  அரசாங்கம்  தவறிவிட்டதாக  நீதிபதி  சு டிங் ஜோ  தமது  தீர்ப்பில்  தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS