தலைநகர்வாசிகளின்  வாழ்க்கைத்  தரத்தை  மேம்படுத்துவார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

கோலாலும்பூர் மாநகரின் புதிய ”டத்தோ பண்டார்  பொது பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ  பாதுகா டாக்டர் மைமுன்னா முகமது ஷெரீப், தலைநகர்வாசிகளின்  வாழ்க்கைத் தரத்தை  சீரப் படுத்த  வேண்டும்  என்று  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார் .

நகர வளர்ச்சித் திட்டங்களில் பரந்த  அனுபவத்தை  கொண்டிருக்கும்  டாக்டர் மைமுன்னா, தனது  அனுபவத்தை  மையக் கருத்தாக கொண்டு  கோலாலும்பூர்  வளர்ச்சித் திட்டங்களுக்கு  பாடுபட வேண்டும்  என்று  பிரதமர்  வலியுறுத்தினார்.

இன்று ஆகஸ்ட்  15  ஆம் தேதி கோலாலும்பூர் டத்தோ பண்டார்-ஆக பதவியில்  அமர்ந்துள்ள  63  வயது  டாக்டர் மைமுன்னா,மரியாதை  நிமிர்த்தமாக  அலுவலகத்தில்  சந்தித்தார் .

கோலாலும்பூர்  மாநகரில் முதலாவது பெண் டத்தோ பண்டார்-ஆக  பொதுப் பேற்றுள்ள டாக்டர் மைமுன்னா, ஓர்  உயர்ந்த அந்தஸ்துக்கு  கோலாலும்பூரை முன்னோக்கி  கொண்டு செல்ல வேண்டும்  என்று பிரதமர்  கேட்டுக்கொண்டார் . 

WATCH OUR LATEST NEWS