அடுத்த  உத்தரவுக்கு  போலீஸ் காத்திருக்கிறது 

ஜோகூர்,ஆகஸ்ட் 15-

ஜோகூர், மாசாய் -யைச்  சேர்ந்த  ஆசிரியை  இஸ்திகோமா அஹ்மத் ரோஸி கொலை  தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள  அவரின்  முன்னாள்  காதலன்  என்று  நம்பப்படும்  37 வயது  முன்னாள்  ஆசிரியர் , நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டுவது  தொடர்பில்  துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் அடுத்த  உத்தரவுக்காக  போலீஸ் துறை  காத்திருக்கிறது .

மூன்று குழந்தைகளுக்கு  தயாரான 33 வயதுடைய  அந்த ஆசிரியையின்  தலை ,நகங்கள்  துண்டிக்கப்பட்ட  நிலையில் அவரின்  சிதைந்த  உடல் , இவ்வாண்டு  ஜனவரி  6  ஆம் தேதி , மலாக்கா, ஜாலான்  அலோர்  கஜா- தம்பின் சாலையில்  ஒரு  குப்பைதோம்பில்  கண்டு பிடிக்கப்பட்டது .

இக்கொலை தொடர்பில்  கைது  செய்யப்பட்டுள்ள அந்த  ஆசிரியையுடன்  பல்கலைக்கழகத்தில் ஒன்றாக  படித்தவரான  அந்த சந்தேகப்பேர்வழி  காட்டிய இடத்தில்  அந்தப் பெண்ணின்  துண்டிக்கப்பட்ட  மேலும்  சில  உடல் அவசியங்களை போலீசார்  மீட்டனர்.

 இக்கொலைக்கான காரணத்தை  போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து  வருகின்றனர் .

WATCH OUR LATEST NEWS