குவா முசாங்,ஆகஸ்ட் 15-
நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கெளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிற்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் பேரிக்காதான் நேஷனல் வெற்றி பெறும் என்று அதன் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் .
அதேவேளையில் பெர்சத்து கட்சி சார்பில் போட்டியிடும் பேரிக்காதான் நேஷனல் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார் .
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கும், பேரிக்காதான் நேஷனலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.