நடவடிக்கை  எடுக்கப்பட்டு விட்டது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

ஒரு  மாற்றுத் திறனாளியான  e-hailing  வாகன  ஓட்டுநரை தாக்கியதாக  கூறப்படும்  அரச  பேராளர்  ஒருவரின்  போலீஸ் மெய்காவலர் மீது ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டு  விட்டதாக  போலீஸ் படைத்தலைவர்  டான் ஸ்ரீ  ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார் .

கடந்த  மே ௨௮ ஆம் தேதி, கோலாலம்பூரில் ஒரு ஹோட்டலின்  வரவேற்பு  அறையில்  நிகழ்ந்ததாக  கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில்  புக்கிட் அமான் போலீஸ்  தலைமையகத்தின்  நேர்மை  மற்றும்  ஒழுங்குப் பிரிவினால் , சம்பந்தப்பட்ட    போலீஸ்  மெய்காவலருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  ஐ.ஜி.பி விளக்கினார்.

இந்த  தாக்குதல் சம்பவம்  தொடர்பாக  மேற்கொண்டு  விசாரணை  தேவை என்று கடந்த  ஜூலை  22  ஆம்  தேதி  சட்டத்துறை  அலுவலகம்  உத்தரவு  பிறப்பித்ததைத் தொடர்ந்து  அவ்விலாக்காவிடம் மீண்டும்  விசாரணை அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டதாக டான் ஸ்ரீ  ரசாருதீன் ஹுசைன் விளக்கினார் 

ஓங் இங் கியோங் என்ற  அந்த  மாற்றுத்திறனாளி  தாக்கப்பட்ட  சம்பவத்தில்  போலீஸ் துறை  நடவடிக்கை  எடுக்காதது  ஏன்  என்று , நேற்று  நடைபெற்ற  செய்தியாளர்கள் கூட்டத்தில்   வழக்கறிஞ்ர்  ந .சுரேந்திரன்  கேள்வி  எழுப்பியிருப்பது  தொடர்பில்   ஐ.ஜி.பி எதிர்வினையாற்றினார் .

WATCH OUR LATEST NEWS