போதைப்பொருள் வைத்திருந்த ஈரான் பிரஜை கைது

பேராக்,ஆகஸ்ட் 15-

பேரா, தபா சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவரிடம் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 1.15 மணியளவில் தாப்பா சிறைச்சாலையில் அதிகாரி ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போது சிறைச்சாலைக்குள் 39 வயதுடைய அந்த ஈராக் பிரஜை, தன் வசம் 46 கிராம் Heroin போதைப்பொருள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

அந்த போதைப்பொருளின் மொத்த மதிப்பு 1,900 வெள்ளியாகும். அந்த போதைப்பொருள் கிட்டத்தட்ட 40 போதைப்பித்தர்களுக்கு விநியோகிக்கக்கூடியதாகும்.

அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பிடிபட்டு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த ஈரான் பிரஜை, கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தாப்பா சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவது தெரியவந்துள்ளதாக டத்தோ அசிசி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் அந்த நபருக்கு எவ்வாறு போதைப்பொருள் கிடைத்தது என்பது குறித்து தாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS