வீட்டின் அறையில் குடும்ப மாது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்

குவாந்தன்,ஆகஸ்ட் 15-

தனது வீட்டின் படுக்கை அறையில் 28 வயது குடும்பமாது ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் தனது மனைவி, வீட்டின் படுக்கை அறையில் சுயநினைவின்றி கிடப்பதாக அவரின் கணவரிடமிருந்து போலீசார் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

அதற்கு முன்னதான தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று அந்த மாதுவின் 62 வயது தந்தையிடமிருந்து போலீசார் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்கான அந்த மாதுவின் உடல் குவந்தன் , தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த மாதுவின் மரணம் தொடர்பில் அவரின் கணவர், மாதுவின் சொந்த தந்தை, மாமனார், மாமியார் உட்பட 27 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வரை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS