ஈப்போ , ஆகஸ்ட் 15-
பேரா,பரித் பன்டர், டிடி செரோங் என்ற இடத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் ஒரு பெரிய பாத்திரத்திற்குள் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத பெண் குழந்தை
கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 4.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அக்குழந்தை பற்றிய தகவல் கிடைத்தது என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
அக்குழந்தை அவ்விடத்தில் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவை தாங்கள் ஆராயவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2.1 கிலோ எடையுள்ள அப்பெண் குழந்தையை மேல் சிகிச்சைக்காக பரித் பன்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டத்தோ அசிசி மேலும் கூறினார்.