கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-
கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் வாகனங்களில் வைக்கப்படும் பொருட்களை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
61 வயதுடைய அந்த முதியவர், கடந்த சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மடிக்கணிகள், கைப்பேசிகள், துணிமணிகள் என 11 ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலான மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக ஏசிபி அகமது சுகர்னோ குறிப்பிட்டார்.