கோலா காங்சார், ஆகஸ்ட் 15-
முட்டைகளை ஏற்றிச்சென்ற லோரி ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுங்சாலை, 257 ஆவது கிலோமீட்டரில் கோலா காங்சார் – ஐ நோக்கி, மெனோரா சுரங்கப்பாதை அருகில் நிகழ்ந்தது.
Hino வகையைச் சேர்ந்த அந்த முட்டை லோரி, தடம் புரள்வதற்கு முன்னதாக சாலைத்தடுப்பை மோதியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.
லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 23 வயது லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் பயணித்த 29 வயது உதவியாளர் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக சபரோட்ஸி நோர் குறிப்பிட்டார்.