கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 15-
ஒரு தம்பதியர் பயணம் செய்த கார், சுவரில் மோதி தீப்பிடித்துக்கொண்டதில் அவ்விருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று சபா, கோத்தா கினபாலு, தாமன் ரியா அருகில் நிகழ்ந்தது.
இதில் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர். .