கிள்ளான் , ஆகஸ்ட் 15-
இந்திய வணிகர்களின் பாரம்பரிய வர்த்தகத் தளமான கிள்ளான்,தேங்கு கெளன லிட்டில் இந்தியா கடைத் தெரு வரிசையில் ஒரு கடையின் மேல்தளத்தில் தீப்பிடித்துக்கொண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கடைத்தொரு வரிசையில் தமது Yashree Store Sdn. Bhd. கடையின் மேல்மாடியில் இன்று காலை 10.30 மணியளவில் தீ பரவியதாக கிள்ளான் லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்தின் தலைவர் Charles Manickam தெரிவித்தார்.
இதில் பலகையிலான மேல்தளத் கிடங்கு முற்றாக அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கடையில் மளிகை பொருட்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.
எனினும் தீயை அணைப்பதற்கு தண்ணீர் பரவலாக பாய்ச்சப் பட்டதால் அனைத்துப் பொருட்களும் சேதமுற்றதாக சார்ல்ஸ் மாணிக்கம் குறிப்பிட்டார்.
தீ மளமளவென வேகமாக பரவியதில் அருகில் உள்ள இரண்டு கடைகளின் பலகையிலான மேல்தளங்கள் சேதமடைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.