இரண்டு விமானங்கள் பாலஸ்தீனர்களை கொண்டு வரும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

காசா நெருக்கடியில் காயமுற்ற 40 பாலஸ்தீன மக்களை சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு அரச மலேசிய ஆகாயப்படைக்கு சொந்தமான AIRBUS A -400M ரகத்திலான இரண்டு விமானங்கள் எகிப்துக்கு சென்றுள்ளன.

எகிப்து, ஏஎல் மசா ஆகாயப்படைத் தளத்திலிருந்து அந்த 40 பாலஸ்தீனர்களும் ஏர்பஸ் விமானங்கள் மூலம் மலேசியாவிற்கு கொண்டு வரப்படவிருக்கின்றனர்.

போரினால் காயம் அடைந்த அந்த 40 பாலஸ்தீன மக்களும் எகிப்தில் உள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக அறியப்படுகிறது.

எலும்புமுறிவு, தீக்காயங்கள் உட்பட பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகியுள்ள அந்த 40 பேருக்கு மலேசியாவில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.

40 பாலஸ்தீனர்களை ஏற்றி வரும் அந்த இரண்டு மலேசிய விமானங்களும் நாளை வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாவிற்கான எகிப்து தூதர் ராகை நாசர், பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS