இணையத் தொடர்பு பாதுகாப்பு விழிப்புணர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

மக்கள் மத்தியில் ஓன் லைன் இணைய பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத் திட்டம் ஒன்றை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் மூலமாக தொடர்புத்துறை அமைச்சு விரைவில் தொடங்கவிருப்பதாக அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விழிப்புணர்வு பாதுகாப்பு பிரச்சாரம், ஒரு விரிவான திட்டத்தை உள்ளடக்கியிருக்கும் என்று துணை அ மைச்சர் விவரித்தார்.

இணையப் பயன்பாட்டை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, அதன் ஆக்கப்பூர்வமான பலாபலன்கள் மற்றும் அதில் நமக்கு இருக்கக்கூடிய கடப்பாடு மற்றும் பொறுப்பு போன்ற முக்கிய கூறுகளை இந்த ஓன்லைன் இணைய பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு பிரச்சாரம் விளக்கிடும் என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS