கொள்கலன்  லோரி மோதி  ஆடவர் பலி

குளுவாங் ,ஆகஸ்ட் 16-

பழுதடைந்த தனது HONDA  HRV கரை , சாலையோரத்தில்  நகர்த்தி  வைப்பதற்கு  அதனை தள்ளி  வைக்கும்  முயற்சியில்  ஈடுபட்ட ஆடவர்  ஒருவர்  கொள்கலன்  லோரியினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார் .

இச்சம்பவம் இன்று  அதிகாலையில் வடக்கு -தெற்கு  நெடுஞ்சாலையில் 53.2 ஆவது  கிலோ மீட்டரில்  ஜோகூர் ,குளுவாங் அருகில்  நிகழ்ந்தது .

இதில் 48 வயதுடைய அந்த காரோட்டி , சம்பவம்  நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட  போலீஸ்  தலைவர் ஏசிபி பஹரின் முகமது நோ தெரிவித்தார் 

WATCH OUR LATEST NEWS