கோலா காங்சார்,ஆகஸ்ட் 16-
கோலாலம்பூரை சுற்றி பார்க்க அழைத்ததாக கூறி, பெரிய பாதாளத்தில் தனது மனைவியை தள்ளி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஆடவர் ஒருவர் கோலா காங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்ச்சாட்டப்பட்டார் .
முகமது அசுவான் அஹ்மத் என்ற 39 வயதுடைய அந்த நபர் நீதிபதி ரோஹைதா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி காலை 5 மணியளவில் 32 வயதுடைய தனது மனைவியை பேரா கெரிக் அருகில் கெரிக் -ஜெலி கிழக்கு மேற்கு நெடிஞ்ச்சலையின் 31 .2 ஆவது கிலோ மேட்டரில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது .