புத்ராஜெயா,ஆகஸ்ட் 16-
ஒரு மாற்றுத் திறனாளியான E . HEALLING ஓட்டுநர் , அரச பேராளர் ஒருவரின் போலீஸ் மெய்காவலரால் தாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த மெய்காவலர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வேண்டும் என்று படைக்கு அப்பீல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹமித் சுல்தான் அபு பேக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த மெய்காவலர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்வது மூலமே அது ஒரு சிறப்பான நடவடிக்கையாக இருக்க முடியும் என்று போலீஸ் படைத்தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்-னுக்கு அந்த முன்னாள் நீதிபதி அறிவுரித்தி யுள்ளார்.
ஓங் இங் கியோங் என்ற அந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய மெய்காவலர் மீது கட்டாயம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்த அரசியலமைப்புச்சட்டதில் இடமில்லை . ஆனால் அவ்வாறு செய்வது போலீஸ் படையின் தார்மிக கடப்பாடாகும் என்று முன்னாள் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்