புத்ராஜெயா,ஆகஸ்ட் 16-
நாடு முழுவதும் உள்ள 16 லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டத்தின் கீழ் சம்பள உயர்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்
அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப் படவிருக்கும் புதிய சம்பளத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 7 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என்று இன்று புத்ரா ஜெயாவில் அமனத் பெர்டானா நிகழ்வில் பிரதமர் அறிவித்தார் .
இதன் மூலம் பொதுச் சேவை ஊழியர்கள் 13 ஆண்டுகளுக்கு பிறகு சம்பள உயர்வை பெறவிருக்கின்றனர். இந்த புதிய சம்பள உயர்வில் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 விழுக்காடு உயர்த்தப்படவிருக்கிறது . அதேவேளையில் அரசு சேவையில் உயர் மட்ட நிர்வாகப் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு 7 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார் .
இந்த சம்பள உயர்வு திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படும் . இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் , ஒருவகை சம்பள உயர்வும் , வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஒருவகை சம்பள உயர்வும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார் .