கால்பந்து  வீரருக்கு  14  நாள்  சிறை 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-

கடந்த வாரம் கோலாலம்பூரில்  நடைபெற்ற  அமச்சூர்  கால்பந்து  போட்டியின்  பொது , ஆட்டக்காரர்கள்  மத்தியில் எழுந்த மோதலில்  கேரம்பித்  கத்தியை  உயர்த்திப்பிடித்த  ஆட்டக்காரர் ஒருவருக்கு  கோலாலும்பூர் , சேஷன்ஸ் நீதிமன்றம்  இன்று 14  நாட்கள்  சிறைத்தண்டனை  விதித்தது.

 ஒரு நாசி லெமாக்  வியாபாரியான  22  வயது  முஹம்மது நூர் இமான் ஷாஃபி என்ற ஆட்டக்காரர் , தனக்கு எதிரான  குற்றத்தை ஒப்புக்கொண்டதைத்  தொடர்ந்து  நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் மேற்கண்ட  தண்டனையை விதித்தார்.

 மற்ற  ஆட்டக்காரர்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும்  தன்மையிலான  அந்த  ஆயுதத்தை  உயர்த்திப்பிடித்த  சம்பவம் , கடந்த  ஆகஸ்ட்  4 ஆம் தேதி தேச மேளவாடி  கால்பந்து  அரங்கில் நிகழ்ந்ததாக  குற்றச்சாட்டில்  தெரிவிக்கப்பட்டது 

WATCH OUR LATEST NEWS